ராசிபலன்

கன்னி

இன்றைய பலன்:

கன்னி நாளின் தொடக்கத்தில் கோவில் வழிபாடு மேற்கொள்வது நல்லது. இன்று கடினமான பணிகள் எளிதில் நடந்தேறும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3 நிறம்: மஞ்சள், ஊதா

வாரப் பலன்:

அன்­புள்ள கன்னி ராசிக்­கா­ரர்­களே,

இந்த ஆண்டின் குருப்பெயர்ச்சி சிறப்பாக அமைந்துள்ளது. சனீஸ்வரன் ஏற்றங்களைத் தருவார். புதன், சுக்கிரனால் நலமுண்டு. ராகு, கேது, சூரியன், செவ்வாய், சந்திரனின் ஆதரவு இல்லை.

நட்புக்காக எதையும் விட்டுக்கொடுக்கக்கூடியவர்கள் நீங்கள். இவ்வாரம் கோள்களின் அமைப்பு குறித்து ஆராய வேண்டிய அவசியமில்லை. மாறாக நம்பிக்கையுடனும் உத்வேகத்துடனும் செயல்பட்டீர்கள் எனில் தடைகளை மீறி வெற்றியை ருசிக்கலாம். அடுத்து வரும் நாள்களில் பொறுப்புகள் அதிகரிக்கும். வழக்கத்தைவிட அதிகம் உழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பீர்கள். இச்சமயம் சுற்றி இருப்பவர்களில் சிலர் உங்களுக்கு எதிராகச் செயல்படும் வாய்ப்புண்டு. எனவே செயல்திட்டங்கள் குறித்து யாரிடமும் மூச்சுவிட வேண்டாம். எப்பாடுபட்டாவது ஏற்றுக்கொண்ட பொறுப்புகளை நிறைவேற்றி நற்பெயரைத் தக்க வைப்பீர்கள் என்பதில் ஐயமில்லை. உடல்நலம் சீராக இருக்கும். முன்பு நோய்வாய்பட்டிருந்தவர்கள் தற்போது தெம்பாக நடமாடுவர். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும். வருமான நிலை சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் நிறைவேறும். பண விவகாரங்கள், புது முயற்சிகளில் நிதானம் தேவை. சொத்துகள் வாங்கும், முயற்சிகள் முன்னேற்றம் காணும். பணியாளர்களும் வியாபாரிகளும் பொறுமையாகச் செயல்படுவது நல்லது. வார இறுதியில் மேற்கொள்ளும் சிறிய தூரப் பயணங்கள் பலனளிக்கும். இச்சமயம் நல்லவர்களின் ஆதரவை பெற்றிடுவீர்கள்.

குடும்பத்தில் எந்தக் குறையும் இல்லை. மனைவி, மக்கள் அன்பாக இருப்பர்.

அனுகூலமான நாள்கள்: மே 6, 7

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6