ராசிபலன்

துலாம்

இன்றைய பலன்:

துலாம் ஏட்டிக்குப் போட்டியாக எதையும் செய்ய வேண்டாம். இன்று அமைதியாகவும் நிதானமாகவும் செயல்பட்டால்தான் சாதிக்க இயலும்.

அதிர்ஷ்ட எண்கள்: 4, 7 நிறம்: ஊதா, வெண்மை

வாரப் பலன்:

அன்­புள்ள துலா ராசிக்­கா­ரர்­களே,

இவ்வாரம் செவ்வாயின் அருள் கிடைத்திடும். ராகு, சந்திரனால் நலமுண்டு. கேது, சூரியன், சுக்கிரன், சனி, புதனின் ஆதரவு இல்லை. இந்த ஆண்டின் குருப்பெயர்ச்சி சாதகமாக அமையவில்லை.

எத்தகைய இக்கட்டான சூழ்நிலையிலும் கொள்கைகளை விட்டுக்கொடுக்காதவர்கள் நீங்கள். அடுத்து வரும் நாள்களில் உங்கள் எண்ணம்போல் சில விஷயங்கள் நடந்தேறக்கூடும். அதே சமயம் சிற்சில ஏமாற்றங்களும் இருக்கவே செய்யும். சில சமயங்களில் சாண் ஏறினால் முழம் சறுக்கும். பின்னர் சாதாரண பணிகளிலும்கூட ஆதாயங்களை அள்ளிக் குவிப்பீர்கள். ஏட்டிக்குப் போட்டி, விட்டேனா பார் என்கிற மனப்போக்கு உதவாது. ஏற்றுக்கொண்ட பொறுப்புகளுக்காக வழக்கத்தைவிட அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். எதிரிகள் திடீரென நட்பு பாராட்டக்கூடும். யாராக இருப்பினும் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் கவனம் தேவை. வருமான நிலை ஓரளவு மனநிறைவு தரும். வழக்கமான தேவைகள் சிக்கலின்றி நிறைவேறும். உடல்நலம் பொதுவாக நன்றாக இருக்கும். எனினும் தேவையற்ற அலைச்சல்கள் தவிர்க்கப்பட வேண்டும். அடுத்து வரும் நாள்களில் எதிரிகள் உங்களை தீவிரமாகக் கண்காணிக்கக்கூடும். எனவே பிணைக் கையெழுத்திடுவது, அதிக முதலீடுகளைச் செய்வது ஆகியவற்றில் உரிய ஆலோசனை பெறுவது நல்லது. பணியாளர்களுக்கு சிறப்புச் சலுகைகள் கிட்டும். செய்தொழிலில் ஓரளவு வளர்ச்சி உண்டாகும். வார இறுதியில் புதுக்குழப்பங்கள் ஏற்படக்கூடும். இச்சமயம் அவசர முடிவுகளை எடுப்பது கூடாது.

வீட்டில் இயல்புநிலை இருக்கும். உடன்பிறந்தோர் ஆதரவாக இருப்பர்.

அனுகூலமான நாள்கள்: மே 9, 11

அதிர்ஷ்ட எண்கள்: 3, 7