அஜித்தின் 53வது பிறந்தநாளையொட்டி அவருக்கு விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை பரிசளித்துள்ளார் மனைவி ஷாலினி.
மே 1ஆம் தேதி அஜித்தின் பிறந்த நாள். இம்முறையும் தனது பிறந்தநாளை எளிமையாகக் கொண்டாடி உள்ளார் அஜித்.
அஜித் ரசிகர்கள் இணையத்தில் பல்வேறு விதமாக தங்கள் வாழ்த்துகளை தெரிவித்ததுடன், பிரபலங்களின் வாழ்த்துச் செய்தியையும் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிர்ந்தனர்.
இந்நிலையில் தன் கணவருக்கு மிகவும் பிடித்தமான மோட்டர் சைக்கிள் ஒன்றை பரிசளித்துள்ளார் ஷாலினி.
நடிகர் அஜித் பைக் பிரியர் என்பதும் இரு சக்கர வாகனத்தில் உலக சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார் என்பதும் ஏற்கெனவே தெரிந்த செய்திகள்தான்.