வாழ்வும் வளமும்

சிங்கப்பூரில் பணியாற்றும் இலங்கைப் பணிப்பெண்களுக்கான நிகழ்ச்சி ஏப்ரல் 28ஆம் தேதி காரிடாஸ் வில்லேஜில் நடைபெற்றது.
இலங்கைத் தலைநகர் கொழும்பில் ஏப்ரல் 22 முதல் 27ஆம் தேதி வரை நடைபெற்ற ‘யு-ப்ரோ’ கிளப் உலகப் போட்டிகளை முடித்துக்கொண்டு உள்ளரங்க கிரிக்கெட் சங்கம் (ஐசிஏ) சிங்கப்பூரின் ஆடவர், மகளிர் அணிகள் நாடு திரும்பியுள்ளன.
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் 119வது கதைக்களம் நிகழ்ச்சி மே 5ஆம் தேதி பிற்பகல் 4.00 மணிக்கு, சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் ஐந்தாம் தளத்தில் அமைந்துள்ள ‘இமேஜினேஷன்’ அறையில் நடைபெறவிருக்கிறது.
தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம், அன்னையர் தினத்தைக் கொண்டாடும் வகையில் 8பாயிண்ட் என்டர்டைன்மெண்ட், D3 டைமண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து அன்னையர் மூவருக்கு அன்னையர் திலகம் விருதுடன் பரிசும் சான்றிதழ்களும் பற்றுச்சீட்டுகளும் வழங்கிச் சிறப்பிக்கவிருக்கிறது.
சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூவின் வாழ்க்கையையும் புகழையும் கொண்டாடும் விதமாக ‘மண்டலா கிளப்’ கலாசார மையம், அவரது சிற்பங்களைக் காட்சிக்கு வைத்துள்ளது.