ராசிபலன்

கடகம்

இன்றைய பலன்:

கடகம் கோபத்தால் எதையும் சாதிக்க இயலாது. இன்று சிலரது பேச்சும் போக்கும் பிடிக்கவில்லை எனில் ஒதுங்கி நிற்கப் பாருங்கள். செலவுகள் உண்டு.

அதிர்ஷ்ட எண்கள்: 4, 9 நிறம்: நீலம், வெண்மை

வாரப் பலன்:

அன்­புள்ள கடக ராசிக்­கா­ரர்­களே,

இந்த ஆண்டின் குருப்பெயர்ச்சி சிறப்பாக அமைந்துள்ளது. புதன், சூரியன், சுக்கிரன், ராகு, கேது, சந்திரன் மேன்மையான பலன்களைத் தருவர். சனி, செவ்வாயால் நலமில்லை.

எந்த சூழ்நிலையிலும் பொறுமை இழக்காதவர்கள் என உங்களைக் குறிப்பிடலாம். உங்களது கடந்த கால பொறுமைக்குப் பரிசாக இப்போது நல்ல பலன் கிடைத்திடும். குருவருளால் உங்களது வாழ்க்கையில் ஏற்றம் உண்டாகும். அடுத்து வரும் நாள்களில் உங்களது உடல்நலம் சிறப்பாக இருக்கும். பணிச்சுமை காரணத்தால் சில சமயங்களில் சற்றே சோர்வு தட்டும் என்றாலும் பெரிய பிரச்சினைகள் இருக்காது. இவ்வாரம் உங்களுக்குரிய வரவுகள் சிறப்பாக இருக்கும். ஒருபுறம் வழக்கமான தொகைகள் கிடைக்கும் எனில், மறுபுறம் எதிர்பாராத ஆதாயங்கள் கிட்டும். வாழ்க்கை வசதிகள் உயரும் எனத் தனியே சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. செலவுகள் கட்டுப்பட்டிருக்கும். முன்பு உங்களுக்கு உதவியவர்களுக்கு நீங்கள் இப்போது பொருளுதவி செய்யும் வகையில் பொருளாதார ரீதியில் பலமாக இருப்பீர்கள். தற்போது நீங்கள் ஈடுபடும் பணிகள் சிறு தடையும் இன்றி நல்லபடியாக முன்னேற்றம் காணும். புது முயற்சிகளில் ஈடுபடலாம் என்றாலும் நம்பகமானவர்களை துணைக்கு வைத்திருப்பது முக்கியம். மங்கலப் பேச்சுகளில் இருந்த தடைகள் விலகும். பயணங்களின்போது சிறு அசௌகரியங்கள் இருக்கும் என்றாலும் ஆதாயங்களும் கிடைத்திடும். பணியாளர்களுக்கு இது ஏற்றமான காலம் எனலாம். வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் விலகிடும். வார இறுதியில் மறைமுக எதிரிகளின் ஆதிக்கம் இருக்கும். இச்சமயம் எங்கும் எதிலும் கவனம் தேவை.

குடும்பத்தில் உற்சாகம் நிறைந்திருக்கும். பிள்ளைகளின் தனித்திறமைகள் பளிச்சிடும்.

அனுகூலமான நாள்கள்: மே 5, 6

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7