ராசிபலன்

தனுசு

இன்றைய பலன்:

தனுசு அசட்டுத் துணிச்சலுடன் ஏதாவது தப்பும் தவறுமாகச் செய்துவிடக் கூடாது. இன்று பெரியவர்கள் பேச்சைக் கேட்டு நடப்பது நல்லது.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 2 நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்

வாரப் பலன்:

அன்­புள்ள தனுசு ராசிக்­கா­ரர்­களே,

இவ்வாரம் சனீஸ்வரனின் அருள் கிடைத்திடும். புதன், சுக்கிரன், சந்திரன் நற்பலன்களைத் தருவர். செவ்வாய், ராகு, கேது, சூரியனால் நலமில்லை. இந்த ஆண்டின் குருப்பெயர்ச்சி சாதகமாக இல்லை.

பிரதிபலன்களை எதிர்பார்க்காமல் பிறருக்கு உதவும் நல்லவர்கள் நீங்கள். தற்போது ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என வாழ்க்கை மிக சுவாரசியமாக நகரும். முக்கிய கோள்கள் பல நற்பலன்களை கிள்ளிக் தராமல் அள்ளித் தருவதால் வாழ்க்கைப் பயணம் சிக்கலின்றி நடக்கும். அடுத்து வரும் நாள்களில் பொறுப்புகள் அதிகரிப்பது குறித்து கவலை வேண்டாம். ஏனெனில் அவற்றின் வழி எதிர்பார்த்த ஆதாயங்கள், பாராட்டுகள் கிட்டும். புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டும். புதியவர்களுடன் அறிமுகமாவீர்கள். சமுதாயத்தில் உங்களது செல்வாக்கும் சொல்வாக்கும் ஏற்றம் காணும். பொருளாதார ரீதியில் தெம்பாக வலம்வருவீர்கள். செலவுகளை சரியாகத் திட்டமிட்டு கட்டுப்படுத்தினால் சேமிப்புகளை உயர்த்த இயலும். பழைய கடன்கள் இருப்பின் அவற்றைத் திருப்பி அளித்து நிம்மதி காண்பீர்கள். மங்கலப் பேச்சுகள், திடீர் பயணங்கள், வழக்குகள் சாதகமாக அமையும். பணியாளர்களும் வியாபாரிகளும் கடந்த கால தவறுகளைத் திருத்திக்கொள்ளும் வாய்ப்புகள் அமையும். வார இறுதியில் உடல்நலம் லேசாகப் பாதிக்கப்படலாம். இச்சமயம் முக்கியமற்ற சந்திப்புகளைத் தவிர்ப்பது நல்லது. மேலும் குலதெய்வ வழிபாடுகளை மேற்கோள்வது நன்மை பயக்கும்.

குடும்பத்தில் சிறு குறையும் இல்லை. மனைவி, மக்கள் ஆதரவாக இருப்பர்.

அனுகூலமான நாள்கள்: மே 6, 8

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6