ராசிபலன்

மீனம்

இன்றைய பலன்:

மீனம் நெருக்கமானவர்கள் கூறும் அறிவுரைகளை அப்படியே ஏற்றுச் செயல்படுங்கள். தெய்வம் துணை நிற்கும். இன்று ஆதாயங்களும் இரட்டிப்பாக நிறைவேறும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 9 நிறம்: ஊதா, வெண்மை

வாரப் பலன்:

அன்­புள்ள மீன ராசிக்­கா­ரர்­களே,

மாதக்கோள்களான புதன், சுக்கிரன் அருள்புரிகின்றன. சந்திரனால் நலமுண்டு. சனீஸ்வரன், ராகு, கேது, செவ்வாய், சூரியனின் மங்கலத்தன்மை கெடும். இந்த ஆண்டின் குருப்பெயர்ச்சி சாதகமாக அமையவில்லை.

சூழ்நிலைக்கு ஏற்ப சரியான முடிவுகளை எடுக்கக்கூடிய புத்திசாலிகள் நீங்கள். தற்போது மிக கவனமாகச் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள். அடுத்து வரும் நாள்களில் எங்கும், எதிலும் இரட்டிப்புக் கவனம் தேவை. வருமான நிலை நன்றாக இருக்கும். வழக்கமான தேவைகள் நிறைவேறும். அதிகம் உழைக்க வேண்டிய நிலை காணப்பட்டாலும், அலுத்துக்கொள்ள வேண்டாம். ஏனெனில் உழைப்பிற்குரிய பாராட்டுகளும் ஆதாயங்களும் தேடி வரும். அதே சமயம் உங்களுக்கு எதிராக குழிபறிக்கும் வேலைகளும் சிலர் ஈடுபடலாம். அடுத்து வரும் நாள்களில் வருமான நிலை ஏற்ற இறக்கமாக காணப்படும். கையிருப்புக்கு ஏற்ப திட்டமிட்டுச் செயல்பட்டீர்கள் எனில் சிக்கலின்றி நாள்களைக் கடத்திவிடலாம். உங்களில் சிலருக்கு உடல்நிலை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே வீண் அலைச்சல்களைத் தவிர்க்கப் பாருங்கள். புது முயற்சி, பயணங்கள் குறித்து அவசரப்பட வேண்டாம். நீண்ட நாள் முயற்சிகளில் மீண்டும் செலவுகள் அதிகரிக்கக்கூடும். வழக்குகள் இழுத்தடிக்கும். குருபலம் குறைவதால் மங்கலப் பேச்சுகளில் இழுபறி உண்டாகும். சொத்துகள் தொடர்பில் அவசரமான முடிவுகளை எடுக்க வேண்டாம். பணியாளர்களுக்கு எதிர்பாராத பொறுப்புகள் தேடி வரும். செய்தொழிலில் சக்திக்கு மீறிய தொகையை முடக்க வேண்டாம். வார இறுதியில் நம்பிக்கையூட்டுக் தகவல்கள் தேடி வரும். இச்சமயம் நல்லவர்களின் ஆதரவு நிம்மதி தரும்.

வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்தால் குடும்ப அமைதி காக்கலாம்.

அனுகூலமான நாள்கள்: மே 9, 10

அதிர்ஷ்ட எண்கள்: 4, 7