ராசிபலன்

மிதுனம்

இன்றைய பலன்:

மிதுனம் சில்லரை விவகாரங்களை பெரிதுபடுத்த வேண்டாம். இன்று உங்கள் போக்கில் அமைதியாகவும் திட்டமிட்டும் செயல்பட்டீர்கள் எனில் ஆதாயங்கள் அதிகரிக்கும். மாலையில் ஓய்வு உண்டு.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 7 நிறம்: பச்சை, மஞ்சள்

வாரப் பலன்:

அன்புள்ள மிதுன ராசிக்காரர்களே,

மாதக்கோள்களான புதன், சூரியன், சுக்கிரனின் அருள் கிடைத்திடும். சந்திரன், செவ்வாய் நலம்புரிவர். கேது, சனி, ராகு தொல்லை தருவர். இந்த ஆண்டின் குருப்பெயர்ச்சி சாதகமாக அமையவில்லை.

நல்லதே நினைத்து நல்லதைச் செய்யக்கூடியவர்கள் நீங்கள். தற்போது உங்கள் இயல்புக்கு ஏற்ப எது குறித்தும் அதிகம் அலட்டிக்கொள்ள வேண்டாம். இவ்வாரம் புதுத் தொடர்புகள் கிட்டும். புது வாய்ப்புகளும் தேடி வரக்கூடும். அவற்றுள் முன் அனுபவம் உள்ள பொறுப்புகளை மட்டும் ஏற்றுக்கொள்ளுங்கள். தடைகளால் துவண்டுவிட வேண்டாம். தகுந்த திட்டங்களும் உழைப்பும் இருப்பின் யாரும் உங்களை அசைத்துவிட முடியாது. உடல்நிலை லேசாகப் பாதிக்கப்படலாம். அதற்காக வீட்டிலேயே முடங்கிவிடக் கூடாது. நண்பர்களும் உறவினர்களும் முடிந்த உதவிகளைச் செய்திடுவர். வருமானம் அதிகரிக்குமா என்பது சந்தேகம்தான். வரவுகளுக்கும் செலவுகளுக்கும் சரியாக இருக்கும். மங்கல நிகழ்வுகள் அதிக செலவுடன் நடந்தேறும். பணியாளர்களுக்கு சில சலுகைகள் கிடைக்கும் எனில், தொழில் ரீதியில் புதிய நுணுக்கங்களைக் கற்க முடியும். வார இறுதியில் முக்கிய விவகாரங்களில் முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். இச்சமயம் எங்கும், எதிலும் கவனம் தேவை.

குடும்ப விவகாரங்களை வெளியாட்களுடன் விவாதிக்காமல் இருப்பது நல்லது.

அனுகூலமான நாள்கள்: மே 9, 11

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6