ராசிபலன்

கும்பம்

இன்றைய பலன்:

கும்பம் கூடுமானவரை உங்களது திட்டங்களை யாருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். இன்று எதிர்பாராத தொகைகள் தேடி வரக்கூடும்.

அதிர்ஷ்ட எண்கள்: 4, 7 நிறம்: வெண்மை, பச்சை

வாரப் பலன்:

அன்­புள்ள கும்ப ராசிக்­கா­ரர்­களே,

இவ்வாரம் நிகழும் புதன் இடமாற்றம் சிறப்பானது. சந்திரன், சுக்கிரன், சூரியன் நலம்புரிவர். சனி, ராகு, கேது, செவ்வாய் வலுவிழப்பர். இடப்பெயர்ச்சிக்குப் பின் குரு இடைநிலைப் பலன்களைத் தருவார்.

கோபம் உள்ள இடத்தில்தான் குணமும் இருக்கும் என்பார்கள். இவ்வாரம் அனைத்தும் உங்கள் எண்ணம்போல் நடந்துவிடாது. எனினும் உங்கள் உழைப்பிற்குரிய நற்பலன்களை நிச்சயம் அறுவடை செய்திடுவீர்கள். அடுத்து வரும் நாள்களில் வழக்கம் போல் பணிச்சுமை, பொறுப்புகள் அதிகரிக்கக்கூடும். மறுபக்கம் வீண் தடைகளும் சிக்கல்களும் முற்றுகையிட வாய்ப்புண்டு. கூடுமானவரை தனித்திறமைகளை நம்பி களமிறங்கப் பாருங்கள். உதவிகள் தேடி வந்தால் எடுத்த எடுப்பிலேயே புறக்கணிக்க வேண்டாம். தற்போது உடல்நலம் நன்றாக இருக்கும். பணிகளின் பொருட்டு அலைந்தாலும் அலுப்புத் தட்டாது. பொருளியல் ரீதியில் நிம்மதியாக இருப்பீர்கள். வரவுகளுக்கும் செலவுகளுக்கும் சரியாக இருக்கும். உபரி வருமானத்திற்கு முயற்சி செய்யலாம். நீண்ட நாள் வழக்குகள் சாதகமாகும். பணியாளர்களும் வியாபாரிகளும் நற்பலன்களைப் பெறுவர். வார இறுதியில் நீண்ட நாள் முயற்சிகள் முன்னேற்றம் காணும். இச்சமயம் சிறு சங்கடங்கள் தோன்றி மறையும்.

குடும்பத்தார் சிறு கருத்து வேறுபாடுகளை பெரிதுபடுத்தாமல் இருப்பது நல்லது.

அனுகூலமான நாள்கள்: மே 8, 10

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3