ராசிபலன்

ரிஷபம்

இன்றைய பலன்:

ரிஷபம் சிறு தடைகளைப் பொருட்படுத்த வேண்டாம். இன்று உங்கள் போக்கில் கடுமையாக உழைத்தீர்கள் எனில் எல்லாம் கைகூடும். திடீர் உதவிகள் கிட்டும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்

வாரப் பலன்:

அன்­புள்ள ரிஷப ராசிக்­கா­ரர்­களே,

இவ்வாரம் சந்திரனின் அருளைப் பெறலாம். புதன், சுக்கிரன், ராகு, செவ்வாயின் அமைப்புகள் சிறப்பாக உள்ளன. சனி, கேது, சூரியனின் ஆதரவு இல்லை. இடப்பெயர்ச்சிக்குப் பின் குருபகவான் இடைநிலைப் பலன்களைத் தருவார்.

அனைவரையும் அரவணைத்துச் செல்லும் நல்ல குணம் படைத்தவர்கள் நீங்கள். இவ்வாரம் நமக்கு என்னாகுமோ ஏதாகுமோ என்றெல்லாம் யோசிக்கத் தேவையில்லை. கோள்களின் அமைப்பு உங்களுக்கு ஆதரவாக இல்லை என்றாலும் பாதகமாகிவிடாது. ஈடுபட்ட பணிகளைக் கச்சிதமாகச் செய்து முடிப்பீர்கள். வழக்கமான தடைகள் குறிக்கிடவே செய்யும். எனினும் உங்களுக்கே உரிய விடாமுயற்சி, கடும் உழைப்பு ஆகியவை துணை நிற்கும். எனவே ஆதாயங்களுக்குக் குறைவிருக்காது. அத்தியாவசியத் தேவைகள் நிறைவேறும். குடும்பத்தாரின் விருப்பங்களில் சிலவற்றையாவது நிறைவேற்றுவீர்கள். உபரி வருமானத்திற்கு முயற்சி செய்வதைவிட விரயங்களைக் கட்டுப்படுத்துவது நல்லது. உடல்நலம் சுமார் எனலாம். உழைப்பிற்குரிய ஓய்வு இருந்தால் சிக்கல் இல்லை. மங்கலப் பேச்சுகள் இழுத்தடிக்கும். பணியாளர்களும் வியாபாரிகளும் கடமையே கண்ணாகச் செயல்படுவது நல்லது. வார இறுதியில் சூழ்நிலை மேலும் சாதகமாகும். இச்சமயம் ஆதாயங்கள் கிட்டும்.

குடும்பத்தில் இயல்புநிலை இருக்கும். பிள்ளைகள் அன்பாகவும் ஆதரவாகவும் இருப்பர்.

அனுகூலமான நாள்கள்: மே 8, 9

அதிர்ஷ்ட எண்கள்: 1, 2