ராசிபலன்

விருச்சிகம்

இன்றைய பலன்:

விருச்சிகம் வீண் பிடிவாதம், அலட்சியப்போக்கு ஆகிய இரண்டுமே கூடாது. இன்று எதிரிகளின் போக்கை கவனித்துச் செயல்படுங்கள். செலவுகள் இருக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 4, 5 நிறம்: பச்சை, மஞ்சள்

வாரப் பலன்:

அன்­புள்ள விருச்­சிக ராசிக்­கா­ரர்­களே,

இந்த ஆண்டின் குருப்பெயர்ச்சி சிறப்பாக அமைந்துள்ளது. புதன், சுக்கிரன், சூரியன், கேது, சந்திரன் மேன்மையான பலன்களைத் தருவர். ராகு, செவ்வாய், சனியால் நலமில்லை.

இறை பக்தி இருப்பின் எதையும் சாதிக்கலாம் என்ற நம்பிக்கை உடையவர்கள் நீங்கள். சனீஸ்வரன் கண்டுகொள்ளவில்லை என்றாலும் குருவின் முழுமையான ஆதரவு உள்ளது. எனவே அடுத்து வரும் நாள்களில் வாழ்க்கையில் பெரிய ஏற்றங்கள் இல்லாவிட்டாலும் பின்னடைவைச் சந்திக்க மாட்டீர்கள் என நம்பலாம். இவ்வாரம் உங்கள் இயல்புக்கு ஏற்ப உரிய திட்டங்கள் வகுத்து செயல்பட்டீர்கள் எனில் நினைத்ததைச் சாதிக்கலாம். ஏற்றுக்கொண்ட பொறுப்புகளை நிச்சயமாக நிறைவேற்றுவீர்கள். எனினும் இந்த வெற்றிகளின் பிண்ணனியில் கடும் உழைப்பு இருக்கும். உடல்நிலை சீராக இருக்காது. உங்களில் சிலருக்கு சிறு உடல்கோளாறுகள் தோன்றி மறையக்கூடும். வயிற்றுவலி, உடல் சோர்வு என சில கோளாறுகள் ஏற்படும்போது உரிய ஓய்வும் மருத்துவ ஆலோசனைகளும் பெறுவது நல்லது. புதிய முதலீடுகள் குறித்தும் நல்ல யோசித்து செயல்படுங்கள். அதேபோல் பயணங்களை மேற்கொள்ளும் முன் அவற்றால் ஏற்படும் சாதக, பாதகங்களை நன்கு ஆராய்வது முக்கியம். பணியாளர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைத்திடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த திருப்பங்கள் ஏற்படும். கூட்டுத்தொழில் புரிவோர் ஏற்றம் காண்பர். வார இறுதியில் எதிரிகளின் ஆதிக்கம் குறையும். இச்சமயம் நீண்ட நாள் முயற்சிகள் முன்னேற்றம் காணும்.

குடும்பத்தில் இயல்புநிலை இருக்கும். உடன்பிறந்தோர் உதவிகரமாக இருப்பர்.

அனுகூலமான நாள்கள்: மே 5, 7

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5