ராசிபலன்

மேஷம்

இன்றைய பலன்:

மேஷம் முக்கியம் எனக் கருதிய பணிகளை செவ்வனே செய்து முடிப்பீர்கள். இன்று உங்களது தனித்திறமைகள் வெகுவாக கைகொடுக்கும். வரவுகள் உண்டு.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 4 நிறம்: ஊதா, வெண்மை

வாரப் பலன்:

அன்­புள்ள மேஷ ராசிக்­கா­ரர்­களே,

மாதக்கோளான புதனின் இடமாற்றம் சிறப்பாக அமையும். சுக்கிரன், கேது, சனி நற்பலன்களைத் தருவர். செவ்வாய், சூரியன், ராகு, சந்திரனால் நலமில்லை. இந்த ஆண்டின் குருப்பெயர்ச்சி சாதகமாக அமையவில்லை.

எந்த சூழ்நிலையிலும் தனிப்பட்ட கொள்கைகளை விட்டுக்கொடுக்காதவர்கள் நீங்கள். குரு, சனியின் அருளைப் பெற்ற உங்களை அதிர்ஷ்டசாலி எனலாம். அடுத்து வரும் நாள்களில் தொட்டது துலங்கும், வைத்தது விளங்கும் என்பது போன்ற சூழ்நிலை அமைந்திருக்கும். பொருளாதார நிலை அமோகமாக இருக்கும். வரவுகளுக்குப் பஞ்சமில்லை. வீண் செலவுகள் கட்டுப்பட்டிருக்கும். கடந்த கால கடன்களைத் திருப்பிச் செலுத்தி நிம்மதி காண்பீர்கள். உடல்நலம் எப்படி இருக்கும் என்ற கேள்வியே தேவையில்லை. நாள் முழுவதும் உழைத்தாலும் சோர்வு தட்டாது. குடும்பத்தாரின் உடல்நலமும் சிறப்பாக அமையும். இவ்வாரம் நீங்கள் கால்பதிக்கும் காரியங்கள் முதல் முயற்சியிலேயே வெற்றி பெறும். சொத்துகள் தொடர்பான சிக்கல்களுக்கு நல்ல தீர்வு கிட்டும். அதேபோல் முன்பு தடைபட்ட மங்கலப் பேச்சு இப்போது சூடுபிடிக்கும். பணியாளர்களும் வியாபாரிகளும் வெற்றிநடை போடுவர். வார இறுதியில் மேற்கொள்ளும் பயணங்களின்போது கவனம் தேவை.

குடும்பத்தில் அமைதி நிலவும். உடன்பிறந்தோர் ஆதரவு கிட்டும்.

அனுகூலமான நாள்கள்: மே 5, 7

அதிர்ஷ்ட எண்கள்: 4, 9