ராசிபலன்

சிம்மம்

இன்றைய பலன்:

சிம்மம் கேட்காமலேயே சிலர் தேடி வந்து பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வது ஆறுதலாக அமையும். இன்று நீண்ட நாள் சிக்கல்கள் சிலவற்றுக்கு முடிவு காண இயலும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6 நிறம்: அரக்கு, பச்சை

வாரப் பலன்:

அன்­புள்ள சிம்ம ராசிக்­கா­ரர்­களே,

இவ்வாரம் இடம்பெயரும் புதனின் இடமாற்றம் சிறப்பாக அமையும். சூரியன், சுக்கிரனால் நலமுண்டு. சனி, ராகு, கேது, செவ்வாய், சந்திரனால் நலமில்லை. இந்த ஆண்டின் குருப்பெயர்ச்சி சாதகமாக அமையவில்லை.

யாரையும் போட்டியாகக் கருதாமல் அரவணைக்கும் பண்பாளர்கள் நீங்கள். தற்போது கோள்களின் அமைப்பு சற்றே கவலையை ஏற்படுத்தி இருக்கலாம். எனினும் எல்லாமே நமக்கு எதிராகத்தான் நடக்கும் என்ற முடிவுக்கு வந்துவிடாதீர்கள். அடுத்து வரும் நாள்களில் சில ஏமாற்றங்களை எதிர்கொள்வீர்கள் என்றாலும் பல விஷயங்கள் சாதகமாகவும் நடந்தேறும். உங்கள் இயல்புக்கு ஏற்ப நம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் செயல்பட்டீர்கள் எனில் உழைப்பிற்குரிய ஆதாயங்களைப் பெறலாம். தற்போது வேலைப்பளு சற்றே குறைந்திருக்கும். எத்தகைய தடைகளையும் மீறி நிர்ணயித்த இலக்குகளை அடைவீர்கள். திடீர் பயணங்கள், புது முயற்சிகள் வகையில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். வருமானம் சுமார்தான். அத்தியாவசியத் தேவைகள் நிறைவேறும் என்றாலும், அவ்வப்போது பற்றாக்குறையும் ஏற்படும். சேமிப்புகள் இருப்பின் அவை கரையும். சிறு உடல்கோளாறுகள் ஏற்பட்டு சரியாகும். வழக்குகளில் சற்றே சாதகப்போக்கு தென்படும். பணியாளர்கள் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெற முடியும். தொழில் விரிவாக்க முயற்சிகளில் நிதானம் தேவை. வார இறுதியில் பணம் கொடுக்கல் வாங்கலைத் தவிர்க்கவும். இச்சமயம் குறுக்கு வழிகளை நாடுமாறு அறிவுரை கூறுபவர்களை அறவே புறக்கணிக்கவும்.

குடும்பத்தில் அமைதி நிலவும். மனைவி, மக்கள் அன்பு பொழிவர்.

அனுகூலமான நாள்கள்: மே 10, 11

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9