நூல் அறிமுகம்

‘தமிழ் தந்த வாழ்வு’ என்ற நூலின் அறிமுக விழா ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 28) பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெறவுள்ளது.
மர்மம், கற்பனை கலந்த உலகங்களுக்கு சிறுவர்களை அழைத்துச் செல்லும் வல்லமை உடையவை, புதிதாக வெளிவந்துள்ள சிங்கப்பூர் தமிழ்ச் சிறுவர் நாவல்கள். உள்ளூர் எழுத்தாளர்களால் எழுதப்பட்ட ‘காணாமல் போன கிழங்கு பாட்டி’, ‘டிராகனைத் தேடி,’ ‘அகிவா’ ஆகிய மூன்று தமிழ் நாவல்களையும் தேசிய கலைகள் மன்றமும் சிங்கப்பூர் புத்தக மன்றமும் கடந்தாண்டு இணைந்து வெளியிட்டன. எட்டு முதல் பன்னிரண்டு வயது வரையிலான மாணவ வாசகர்களை இம்முயற்சி மையப்படுத்தியது.
கவிப்பேரரசு வைரமுத்துவின் 39வது நூலான ‘மகா கவிதை’ நூலின் அறிமுக விழா, சிங்கப்பூரில் இம்மாதம் 9ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் நூலாசிரியர் வைரமுத்து நேரில் கலந்துகொள்ளவிருக்கிறார்.
உன்னதமான கதைக்களம், சுவாரசியமான கதாபாத்திரங்கள் இடம்பெறும் கதைப் புத்தகங்கள் என்றால் 24 வயது நுஷா தக்‌ஷையினிக்கு மிகவும் பிடிக்கும்.
10ஆம் நூற்றாண்டில் நடந்ததாக எழுத்தாளர் மா. அன்பழகனால் புனையப்பட்ட நாவல் “செம்பியன் திருமேனி”. தமிழகத்தின் மதுரை, திருவாரூர், நெய்வேலி, சென்னை ஆகிய இடங்களில் வெளியிடப்பட்டுப் பலராலும் பாராட்டப்பட்ட அந்த நூல் இப்போது சிங்கப்பூரில் அறிமுகம் காணவிருக்கிறது.