போதைப்பொருள்

சென்னை: தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக பல்வேறு கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. அண்டை மாநிலங்களின் வழியாக போதைப்பொருள் தமிழகத்துக்கு எளிதில் கொண்டு வந்து விற்பனை செய்பவர்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.
போதைப்பொருள் தொடர்பான குற்றத்துக்காக பதினைந்து ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற குண்டர் கும்பல் தலைவர் ஒருவர் சிறைத் துறை அதிகாரிகளைத் தூண்டிவிட்டு மற்ற கைதிகள் குறித்த ரகசியத் தகவல்களைப் பெற்றார்.
போக்குவரத்துக் காவல் அதிகாரி ஒருவர் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த சமயம், அவரிடமிருந்து 22 வயது ஆடவர் தப்பியோட முயற்சி செய்து கைதான சம்பவம் மே 15ஆம் தேதி காலை நிகழ்ந்தது.
மும்பை: மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரேசில் நாட்டுப் பயணி ஒருவர் சந்தேகப்படும் விதத்தில் நடந்துகொண்டார். அவரிடம் சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத் திய போது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தார்.
சென்னை: தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை தடுப்பது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.