லீ சியன் லூங்

இன்று திரு லாரன்ஸ் வோங் இஸ்தானா அதிபர் மாளிகையில் பிரதமராகப் பதவியேற்றதும் அங்கு விருந்து வழங்கப்படுகிறது.

பிரதமர் பதவியேற்பு விழாவுக்காக, கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் உணவங்காடிக் கடையான ‘ஸ்கை லேப் குக் ஃபுட்’ கடை தயாரித்த இறால் வடை, மசால் வடை, சமோசா ஆகியவற்றைச் சுமார் 1,000 விருந்தினருக்காகப் பரிமாறினர். கடை உரிமையாளர் பொன்னம்மா சண்முகத்தின் தலைமையில் பலகாரங்கள் சமைக்கப்பட்டன.
சிங்கப்பூரின் அடுத்த பிரதமராகப் பதவியேற்கவிருக்கும் லாரன்ஸ் வோங்கிற்கு பாட்டாளிக் கட்சி உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளன.
துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் மே 15ஆம் தேதி சிங்கப்பூரின் நான்காவது பிரதமராகப் பதவி ஏற்கவுள்ளார். இத்தகைய தலைமைத்துவ மாற்றம் நாட்டுக்கும் மக்களுக்கும் முக்கியமான ஒன்று. மேலுமோர் ஒளிமயமான எதிர்காலத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இளையர்கள் சிலரைச் சந்தித்துப் பேசியது இவ்வார இளையர் முரசு.
மே 15ஆம் தேதியன்று பிரதமர் பதவியிலிருந்து பிரதமர் லீ சியன் லூங் விலகுகிறார். சிங்கப்பூரின் அடுத்த பிரதமராக திரு லாரன்ஸ் வோங் பதவி ஏற்கிறார்.
சிங்கப்பூரர்கள் தங்கள் நாட்டின் அரசியல் அமைப்பில் சிறப்பான, அரிதான ஒன்றைக் கொண்டுள்ளனர். மக்கள் தொடர்ந்து மக்கள் செயல் கட்சிக்கு (மசெக) அதிகாரம் கொடுத்துள்ளனர். பதிலுக்கு அந்தக் கட்சி பாதுகாப்பு தொடங்கி வீட்டுவசதி, கல்வி, சுகாதாரம், பொருளியல் வரை அனைத்திலும் தலைசிறந்த முன்னேற்றத்தை வழங்கியுள்ளது என்று பிரதமர் லீ சியன் லூங் கூறினார்.